எதிர்வரும் வெள்ளிக்கிழமை சஜித் பிரேமதாசவை கட்சித் தலைவராக்குவதற்கான பிரச்சார நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் என தெரிவிக்கிறார் முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னான்டோ.
கட்சித் தலைமையோடு நேரடி பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதை சஜித் தவிர்த்து வருவதாக தெரிவிக்கப்படும் நிலையில், ஏலவே சிரேஷ்ட உறுப்பினர்களுடன் இது தொடர்பில் கலந்துரையாடப்பட்டு வருவதாகவும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராகவும் எதிர்க்கட்சித் தலைவராகவும் சஜித் பிரேமதாச விரைவில் எழுச்சி பெறுவார் எனவும் ஹரின் மேலும் விளக்கமளித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் நீண்டகால தலைவர் ரணில் விக்கிரமசிங்க எதிர்க்கட்சித்தலைவராகவும் நீண்ட காலம் பதவி வகித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment