சுவிஸ் தூதரக ஊழியர் கடத்தப்பட்ட விவகாரம் தமிழ் டயஸ்போராவின் திட்டமிட்ட செயல் என தெரிவிக்கிறார் பாதுகாப்பு செயலாளர் கமல் குணரத்ன.
குறித்த விவகாரம் தொடர்பில் இது வரை இடம்பெற்ற விசாரணையின் தகவல்கள் ஏனைய தூதரகங்களுடனும் பகிரப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கின்ற அவர், ஒரு இலங்கையரின் பாதுகாப்பு பிரச்சினையை கையாள வேண்டியது அரசின் கடமையெனவும் அதனை அரசு சரியாக செய்து வருவதாகவும் தெரிவிக்கிறார்.
குறித்த கடத்தல் விவகாரம் சர்வதேச அவதானத்தைப் பெற்றுள்ள நிலையில் அவ்வாறு ஒரு சம்பவம் இடம்பெறவில்லையென அரசாங்கம் மறுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment