வாகன விபத்தொன்றின் பின்னணியில் கைது செய்யப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவக்க இன்று பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள அதேவேளை, முன்னர் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த அவரது சாரதிக்கு விளக்கமறியல் வழங்கப்பட்டுள்ளது.
25,000 ரூபா ரொக்கம் மற்றும் 5 லட்ச ரூபா பெறுமதியான இரு சரீரப் பிணையில் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.
சம்பவ தினம் இடம்பெற்ற விபத்தில் பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படும் நபர் சட்டவிரோதமான மோட்டார் சைக்கிள் ஒன்றை வீதியில் உபயோகித்ததாக அவருக்கு எதிராக தற்போது முறைப்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment