மத்தள விமான நிலையத்தை விற்பனை செய்வதற்று அரசு தீர்மானித்துள்ளதாக வெளியாகி வரும் தகவல்களில் உண்மையில்லையென்கிறார் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க.
விமான நிலைய முகாமைத்துவத்தில் மாற்றங்களைக் கொண்டு வருவது தொடர்பிலேயேத தாம் அபிப்பிராயம் வெளியிட்டிருந்த நிலையில் அதனை திரிபு படுத்தி விமான நிலையத்தை விற்பனை செய்யப் போவதாக செய்தி பரவி வருவதாக அவர் தெரிவிக்கிறார்.
மஹிந்த ராஜபக்சவின் பெயரில் உருவாக்கப்பட்ட மத்தள விமான நிலையத்தினை இந்திய நிறுவனம் ஒன்று குத்தகைக்குப் பெற்றுக்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில் பிரசன்ன இவ்வாறு விளக்கமளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment