வவுனியாவில் இன்று அதிகாலை இராணுவ சிப்பாய் ஒருவர் தாக்கப்பட்டு அவரது ஆயுதம் பறித்துச் செல்லப்பட்ட சம்பவம் இடம்பெற்றிருந்தது.
இந்நிலையில், கெக்கிராவயில் குறித்த ஆயுதம் மீட்கப்பட்டுள்ளதாக தற்போது இராணுவம் தகவல் வெளியிட்டுள்ளது.
பொகஸ்வேவ முகாமில் காவல் கடமையில் இருந்த சிப்பாய் ஒருவரே தாக்கப்பட்டு தொண்டைப்பகுதியில் அறுப்புக்குள்ளாகியுள்ளதாகவும் அவர் தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் இராணுவம் விளக்கமளித்துள்ளது.
No comments:
Post a Comment