அரசியலமைப்பு கவுன்சில் சந்திப்பு: சஜித்துக்கு அழைப்பில்லை - sonakar.com

Post Top Ad

Thursday, 12 December 2019

அரசியலமைப்பு கவுன்சில் சந்திப்பு: சஜித்துக்கு அழைப்பில்லை


புதிய அரசின் கீழான கன்னியமர்வை மேற்கொண்டுள்ளது அரசியலமைப்பு கவுன்சில். 



பிரதமர் என்ற அடிப்படையில் மஹிந்த ராஜபக்ச கலந்து கொண்டுள்ள போதிலும் உத்தியோகபூர்வ ரீதியாக எதிர்க்கட்சித் தலைவராக அறிவிக்கப்படாத நிலையில் சஜித்துக்கு இன்றைய கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்படவில்லையென அறியமுடிகிறது.

ஜனவரி மூன்றாம் திகதி நாடாளுமன்ற அமர்வின் போதே சஜித் பிரேமதாச உத்தியோகபூர்வமாக எதிர்க்கட்சித் தலைவராக அறிவிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment