ராஜித சேனாரத்னவுக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது அவரது வீட்டில் இல்லையென தகவல்கள் வெளியாகியுள்ளன.
இன்று காலை பொலிசார் அவரைக் கைது செய்வதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருந்த நிலையில் இது குறித்து இன்று கண்டி சென்றிருந்த சம்பிக்க ரணவக்கவிடம் விசாரிக்கவிடம் வினவிய போது, அவர் வர வேண்டிய நேரத்தில் கட்டாயம் நீதிமன்றம் வருவார் என சம்பிக்க விளக்கமளித்துள்ளார்.
தமது ஆட்சிக்காலத்தில் உருவாக்கிய சுயாதீன நீதித்துறை மற்றும் பொலிஸ் மீது தொடர்ந்தும் நம்பிக்கையிருப்பதாகவும் தெரிவிக்கின்ற அவர், ராஜிதவுக்கு 30ம் திகதி வரை அவகாசம் இருப்பதனால் யாரும் அது பற்றிக் குழப்பிக் கொள்ளத் தேவையில்லையென தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment