கழுத்தறுப்பு பிரிகேடியருக்கு இங்கிலாந்தில் அபராதம்! - sonakar.com

Post Top Ad

Friday, 6 December 2019

கழுத்தறுப்பு பிரிகேடியருக்கு இங்கிலாந்தில் அபராதம்!



சுதந்திர தினத்தன்று லண்டன், இலங்கைத் தூதரகத்தின் முன்னால் ஆர்ப்பாட்டத்தில் இடம்பெற்றவர்களை நோக்கி கழுத்தறுப்பு சமிக்ஞை காட்டிய பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோவுக்கு 2400 பவுண்கள் அபராதம் விதித்துள்ளது வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றம்.



பிரிகேடியரின் உடல்மொழி மற்றும் ஆக்ரோஷமான நடவடிக்கையாகவே குறித்த சம்பவத்தை விபரித்துள்ள நீதிமன்றம் குறித்த நபருக்கு ராஜதந்திர பாதுகாப்பின் கீழ் இதற்கு விதிவிலக்கு எதுவுமில்லையென சுட்டிக்காட்டியுள்ளது.

2018ம் ஆண்டு லண்டனில் இடம்பெற்ற குறித்த சம்பவம் பாரிய அளவில் சர்வதேச அவதானத்தைப் பெற்றதோடு தமிழ் சமூகம் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களிலும் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment