ஐக்கிய தேசியக் கட்சி தலைமைத்துவம் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் பதவி தொடர்பில் இரு தினங்களுக்குள் தீர்மானம் தரப்படாவிட்டால் சஜித் தரப்பு வேறு முடிவொன்றை எட்டவுள்ளதாக தெரிவிக்கிறது.
சஜித் பிரேமதாசவுக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவியை வழங்குவதற்கு கட்சிக்குள் இணக்கம் ஏற்பட்டிருக்கின்ற அதேவேளை எதிர்க்கட்சியாக செயற்படுவதற்கான சஜித்தின் திட்ட வரைபினை தருமாறு ரணில் ஏலவே கோரிக்கை விடுத்துள்ளார்.
இதேவேளை, பௌத்தர்களின் ஆதரவை கட்சி இழந்திருப்பதாகவும் அதனைக் கட்டியெழுப்புவதற்கான நடவடிக்கைகள் தேவைப்படுவதாகவும் ஐ.தே.க தலைமை மட்டத்தில் ஆலோசிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment