கடந்த ஆட்சியில் இருந்த எந்த நீதிபதியும் இது வரை மாறவோ, புதிய நீதிபதிகள் சேர்க்கப்படவோ இல்லாத நிலையில் தமக்கெதிரான குற்றச்சாட்டுகளை அவர்களால் உருவாக்கப்பட்ட சுயாதீன நீதித்துறை ஊடாக முகங்கொடுப்பதற்கு எதற்காக பயந்து ஒளிய நேரிட்டது என கேள்வியெழுப்பியுள்ளார் விமல் வீரவன்ச.
மஹிந்த ஆட்சியின் பங்காளிகளுக்கு எதிராக கூட்டாட்சியினர் நடவடிக்கை எடுத்த போது இவ்வாறு யாரும் ஓடி ஒளியவில்லையெனவும் தெரிவிக்கின்ற அவர், தாம் அவற்றை எதிர்கொண்டதாகவும் ராஜித தவறான உதாரணத்தை உருவாக்கியுள்ளதாகவும் விமல் மேலும் தெரிவிக்கிறார்.
வெள்ளை வேன் சாரதிகள் என இருவரை செய்தியாளர் சந்திப்பில் அறிமுகப்படுத்தியதன் பின்னணியில் ராஜித கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment