ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப் பதவியை சஜித் பிரேமதாசவுக்குத் தருவதற்கு ரணில் விக்கிரமசிங்க தொடர்ந்தும் தயங்கி வரும் நிலையில் புதிய கட்சியொன்றூடாக அவர் போட்டியிடுவார் என அவரது ஆதரவாளர்கள் தெரிவித்து வருகின்றனர்.
இதற்கான உத்தியோகபூர்வ அறிவிப்பு ஜனவரியில் வெளியிடப்படும் என ஹரின் பெர்னான்டோ தெரிவிக்கின்ற அதேவேளை, மாற்றீடாக கங்காரு சின்னத்தை சஜித் விரும்புவதாக தெரிவிக்கப்படுகிறது.
ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாச தாமதமாக அங்கீகரிக்கப்பட்டிருந்த போதிலும் கட்சி மட்டத்தில் முறையான ஆதரவு கிடைக்காத காரணத்தினாலேயே தோல்வியுற்றதாக சஜித் தரப்பு தெரிவித்து வருகிறது. இந்நிலையில், பிரதமர் வேட்பாளராகவும் சஜித் ஏற்றுக் கொள்ளப்பட்டாலும் கட்சித் தலைமைப் பதவி இருந்தால் மாத்திரமே வெற்றி பெறவும் கட்சியை அடுத்த கட்டத்துக்கு நகர்த்திச் செல்ல முடியும் எனவும் சஜித் தரப்பு நம்புகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment