இலங்கையின் ஈஸ்டர் தாக்குதல் போன்று கேரளா மற்றும் தமிழ் நாட்டில் தாக்குதல்களை மேற்கொள்ள திட்டமிட்டிருந்ததாகக் கருதப்படும் சஹ்ரானோடு தொடர்பிலிருந்த இருவருக்கு எதிராக இந்திய புலனாய்வுத்துறை குற்றப்பத்திரிகை பதிவு செய்துள்ளது.
குறித்த நபர்கள் சஹ்ரானோடு நீண்ட காலம் தொடர்பிலிருந்து வந்ததோடு தாக்குதலுக்கு திட்டம் வகுத்ததாக குற்றஞ்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டிருந்தனர். இந்நிலையில் தற்போது குறித்த நபர்களுக்கு எதிராக குற்றபத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஈஸ்டர் தாக்குதல் பற்றி இந்திய உளவு நிறுவனம் தொடர்ச்சியாக இலங்கை அரசுக்குத் தகவல் வழங்கி வந்த போதிலும் இலங்கையரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கத் தவறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment