நாரேஹன்பிட்ட தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தொடர்ந்தும் வைத்தியசாலையிலேயே தங்க வைக்கப்பட்டுள்ளார்.
ஆயுதங்களுடனான சிறைக்காவலர்கள் நால்வர் அவருக்கு பாதுகாப்பு வழங்கி வரும் நிலையில் அங்கு ராஜிதவுக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
தனது கைதைத் தவிர்ப்பதற்கு ராஜித தாக்கல் செய்திருந்த மனு மீதான விசாரணை 30ம் திகதி இடம்பெறவுள்ள நிலையில் ஏலவே அவர் கைது செய்யப்பட்டுள்ள அதேவேளை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதனால் அங்கேயே வைத்து பராமரிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment