2018 சுதந்திர தினத்தன்று ஆர்ப்பாட்டக்காரர்களைப் பார்த்து கழுத்தறுப்பு சமிக்ஞை செய்த, அப்போதைய லண்டன் தூதரக பாதுகாப்பு ஆலோசகர் பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோவுக்கு அண்மையில் அங்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் அதிருப்தி வெளியிட்டுள்ளது இலங்கை அரசு.
வெளியுறவுத்துறை இது தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறித்த தீர்ப்பு அரசியல் காரணங்களை அடிப்படையாகக் கொண்டது எனவும் பிரிகேடியருக்கு ராஜதந்திர அந்தஸ்த்து இருந்ததால் அவருக்கு எதிராக அபராதம் விதிக்கப்பட்டிருக்கக் கூடாது எனவும் தெரிவிக்கிறது.
ஆர்ப்பாட்டக்காரர்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் கொடியை ஏந்தியிருந்தத நிலையிலேயே பிரிகேடியர் இவ்வாறு கழுத்தறுக்கப்படும் என சமிக்ஞை செய்திருந்த நிலையில் தற்போது இவ்விவகாரம் ராஜதந்திர மட்ட போராட்டமாகவும் மாறியுள்ளமையும் வெஸ்ட்மின்ஸ்டர் நீதி மன்றம் பிரியங்க பெர்னான்டோவின் செயலை கடுமையாக கண்டித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment