பௌத்த பிக்குகளை அவமதிப்பவர்களுக்கு ஐக்கிய தேசியக் கட்சி இனி வரும் காலங்களில் இடம் தரக்கூடாது என வேண்டுகொள் விடுத்துள்ளது மூன்று பிரதான நிகாயக்களையும் சேர்ந்த இளந்துறவிகள் சங்கம்.
கடந்த ஜனாதிபதி தேர்தலில் பௌத்தர்களின் வாக்குகளை ஐக்கிய தேசியக் கட்சி இழந்துள்ளதாக கருதப்படுகிறது.
இந்நிலையில், மங்கள மற்றும் ரஞ்சன் ராமநாயக்கவின் தேர்தல் கால பேச்சுக்களும் ஜனாதிபதி தேர்தல் தோல்வியில் பங்களித்துள்ளதாகவும் இப்பின்னணியில் அவர்களுக்கு எதிர்வரும் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு தரப்படக் கூடாது எனவும் கருத்து வெளியிடப்பட்டு வருகிறது.
எனினும், கட்சி இடம் தராவிட்டால் தாம் சுயாதீனமாகப் போட்டியிடப் போவதாக ரஞ்சன் தெரிவித்துள்ளமையும், மங்கள சமரவீர தேர்தலில் போட்டியிடப் போவதில்லையென அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment