இலங்கை வானொலியின் பொதுஜன பெரமுன தொழிற்சங்க உறுப்பினர்களால் குறித்த சேவையின் உதவிப் பணிப்பாளர் மிரட்டப்பட்டு, அவரது அலுவலகம் உடைக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது.
நிர்வாக உதவிப் பணிப்பாளர் சிறிமாலி லியனகமவே இவ்வாறு மிரட்டி அச்சுறுத்தப்பட்டுள்ளதுடன் பெரமுன தொழிற்சங்க பிரிவின் தலைவர் சுசந்த கருணாரத்ன தலைமையிலான குழுவினரே இதன் பின்னணியில் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் ஜனாதிபதி செயலகத்துக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மஹிந்த ராஜபக்ச ஆட்சிக் காலத்தில் மேர்வின் சில்வாவினால் ரூபவாஹினியில் பாரிய சர்ச்சை உருவாகியிருந்தமை நினைவூட்டத்தக்கது.
No comments:
Post a Comment