முன்னாள் கிழக்கு மாகாண ஆளுனர் ஹிஸ்புல்லாஹ்வுக்கு எதிரான விசாரணையை துரிதப்படுத்துமாறு கோரிக்கை விடுத்துள்ளார் அத்துராலியே ரதன தேரர்.
மட்டக்களப்பு கம்பஸ் விவகாரம் தொடர்பில் தாம் மேற்கொண்ட முறைப்பாட்டுக்கு எதிராக இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையென சுட்டிக்காட்டும் அவர், விரைவாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
அரசியல் தலையீடின்றி விசாரணையை நடாத்த ஜனாதிபதி அனுமதிப்பார் எனத் தாம் நம்புவதாக இன்றைய தினம் சி.ஐ.டி சென்று தமது முறைப்பாடு பற்றி அறிந்து திரும்பிய ரதன தேரர் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது
No comments:
Post a Comment