தனது பெயரைப் பாவித்து பரவலான ரீதியில் மோசடி சம்பவங்கள் இடம்பெற்று வருவதாக ஜனாதிபதி தெரிவிக்கிறார்.
அவ்வாறு அறியப்பட்ட விடயங்கள் குறித்து ஏலவே பொலிஸ் விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் ஜனாதிபதி செயலகத்தோடு தொடர்புள்ளதாகக் கூறி பல்வேறு மோசடிகள் நடைபெற்று வருவதற்கும் தனக்கும் தொடர்பில்லையெனவும் ஜனாதிபதி கோட்டாபே ராஜபக்ச விளக்கமளித்துள்ளார்.
இதேவேளை, சந்தேகத்துக்குரிய நடவடிக்கைகளை அறிந்தால் அருகில் உள்ள பொலிஸ் நிலையத்தில் முறையிடுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment