துறைமுக நகரம் கொழும்பின் பகுதியாக பிரகடனம் - sonakar.com

Post Top Ad

Sunday, 8 December 2019

துறைமுக நகரம் கொழும்பின் பகுதியாக பிரகடனம்


கொழும்பு, காலி முகத்திடலை அண்டி நிர்மாணிக்கப்பட்டு வரும் துறை முக நகரத்தை கொழும்பின் பகுதியாக பிரகடனப்படுத்தியுள்ளார் பிரதமர் மஹிந்த ராஜபக்ச.


சீன முதலீட்டில் உருவாகி வரும் துறைமுக நகரம் சீனாவுக்கு முழுமையாக விற்பனை செய்யப்பட்டிருப்பதாக முன்னர் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த நிலையில், ரணில் - மைத்ரி கூட்டரசு இப்பகுதியின் 269 ஹெக்டயர் நிலத்தை சீன அரசுக்கு குத்தகைக்கு விட இணங்கியிருந்தது.

இந்நிலையில், தற்போது குத்தகை நிலத்திலேயே சீன அரசின் முதலீட்டில் இந்நகரம் உருவாகி வருவதுடன் வெளிநாட்டு நிறுவனங்களின் முதலீடுகள் எதிர்பார்க்கப்படுகிறது. நேற்றைய தினம் அங்கு விஜயம் செய்த பிரதமர், கட்டுமான நடவடிக்கைகளை துரிதப்படுத்த அரசு பூரண ஒத்துழைப்பு வழங்கவுள்ளதாக தெரிவித்ததுடன் துறைமுக நகரத்தை கொழும்பு மாவட்டத்தின் பகுதியாகவும் பிரகடனம் செய்துள்ளார்.

No comments:

Post a Comment