சுவிஸ் தூதரக ஊழியர் கடத்தல் நாடகத்தின் இயக்குனர் ஐக்கிய தேசியக் கட்சியின் ராஜித சேனாரத்ன என தெரிவிக்கிறார் டிலான் பெரேரா.
கடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படும் ஊழியரை மாத்திரம் கைது செய்திருப்பது விடயத்துக்குத் தீர்வாகாது எனவும் பின்னணியில் இயங்கிய அனைவரும் சட்டத்திற்கு முன் நிறுத்தப்பட வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
குறித்த கடத்தல் நாடகம் ஜனாதிபதி கோட்டாபே ராஜபக்சவின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிப்பதற்கான முயற்சியென அவர் மேலும் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment