கண்டி மாவட்ட பள்ளிவாயல்கள் சம்மேளன அங்குரார்ப்பண வைபவம் 15.12.2019ம் திகதி கண்டி ஜின்னா ஞாபகார்த்த மண்டபத்தில் நடைபெற்றது.
கண்டி மாவட்டத்திலுள்ள தெல்தோட்டை, நாவலப்பிட்டிய, கம்பல, உடுநுவர, யட்டிநுவர, கலகெதர, அக்குரண, மடவள, தும்பற, கண்டி நகர் ஆகிய சம்மேளனங்கள் ஒன்று சேர்ந்து மாவட்ட சம்மேளனம் உருவாக்கப்பட்டது.
இக்கூட்டத்தில் எதிர்வரும் மூன்று ஆண்டுகளுக்கான உத்தியோகத்தர்கள் தெரிவு நடைபெற்றன, இதில் தலைவராக கே.ஆர்.ஏ. சித்திக் தெரிவுசெய்யப்பட்டார். செயலாளராக என்.எம்.எம். மன்சூர் அவர்களும் பொருளாளராக எம்.ஜே.எம். ரிஸ்வி ஆகியோர் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டனர்.
-SH
No comments:
Post a Comment