போதைப் பொருள் வர்த்தகத்தில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனையை அமுல் படுத்துவதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவின் அடிப்படையில் அதற்கெதிரான தடை மார்ச் மாதம் வரை நீடிக்கப்பட்டுள்ளது.
ஐந்து நீதிபதிகள் கொண்ட குழுவினர் இதனை பரிசீலித்து வருகின்ற நிலையில், மார்ச் மாதம் விசாரணையைத் தொடர்வதற்கு ஏதுவாக இத்தடை நீடிப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் பலருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டுள்ள போதிலும் பெரும்பாலானோர் ஆயுள் கைதிகளாக இருந்து வருகின்ற அதேவேளை அண்மையில் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, மரண தண்டனை கைதியொருவருக்கு பொது மன்னிப்பு வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment