முன்னாள் மத்திய வங்கி ஆளுனரும் தேடப்பட்டு வரும் நபருமான அர்ஜுன் மகேந்திரனை இலங்கைக்கு அழைத்து வந்து விசாரணைகளை முன்னெடுப்பதற்கான முயற்சிகள் தொடர்வதாக தெரிவித்துள்ளார் சட்டமா அதிபர்.
இது தொடர்பில் இடம்பெற்று வரும் விசாரணையில் தகவல் வழங்குகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
சிங்கப்புறை நீதித்துறையுடன் தொடர்புகளைப் பேணி வருவதோடு ஆவணங்கள் பரிமாறப்பட்டு வருவதாகவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. இலங்கை அரசின் பார்வையிலிருந்து மறைந்து வாழ்கின்ற போதிலும் வேறு நாட்டு ஊடகங்களுக்கு அர்ஜுன் மகேந்திரன் செவ்வி வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment