இந்நாட்டில் தேடிப் பார்த்து தீர்த்து வைக்கப்பட வேண்டிய எத்தனையோ பிரச்சினைகள் இருக்க ராஜித சேனாரத்னவைக் கைது செய்வதுதான் நாட்டின் தலையாய பிரச்சினை போன்று அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கைகள் வெளிப்படையான அரசியல் பழிவாங்கல் என தெரிவிக்கிறார் நா.உ குமார வெல்கம.
ஜனவரி 3ம் திகதி நாடாளுமன்றம் கூடும் போது எதிர்க்கட்சியில் அமர்வதற்கே எதிர்பார்த்திருக்கும் குமார வெல்கம, ஆரம்பத்திலிருந்தே கோட்டாபே ராஜபக்சவை எதிர்த்து வருகிறார்.
இந்நிலையில், ஒவ்வொரு ஆட்சி மாற்றத்தின் போதும் இடம்பெறும் அதே அரசியல் பழிவாங்கலையே கோட்டா அரசும் செய்திருப்பதாக அவர் விசனம் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment