ஐக்கிய நாடுகள் சபையூடாக அரசியல் புகலிடம் கோரி விண்ணப்பித்திருந்த நிலையில் நீர் கொழும்பில் தங்கியிருந்த பாகிஸ்தான் பிரஜையொருவர் உடம்பில் வெட்டுக் காயங்களுடன் நேற்றிரவு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கிறார்.
தனியாக வசித்து வந்த 49 வயது நபர் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இலங்கையில் 800க்கும் அதிகமான பாக். பிரஜைகள் இவ்வாறு ஐ.நா ஊடாக விண்ணப்பித்துத் தங்கியிருக்கின்ற அதேவேளை, ஈஸ்டர் தாக்குதலின் போதும் இவர்களை பாதுகாப்பான இடத்துக்கு அழைத்துச் செல்ல நேரிட்டிருந்தமை நினைவூட்டத்தக்கது.
No comments:
Post a Comment