கடந்த ஆட்சியில் ஆகக்கூடிய அரச நிறுவனங்களுக்குப் பொறுப்பாகவிருந்த ரிசாத் பதியுதீனுக்கு எதிராக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அரச நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாகவும் தேர்தல் காலத்தில் வாக்காளர்களை அழைத்துச் செல்ல வாகன வசதிகள் செய்து கொடுக்க இவ்வாறு அரச நிதி பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், மன்னார் பிரதேசத்திலிருந்தே ரிசாத் பதியுதீனைக் கடுமையாக எதிர்க்கும் நபர்கள் தொடர்ச்சியாக முறைப்பாடுகள் மற்றும் தகவல்களை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment