புறக்கோட்டை நடைபாதை வியாபாரம், முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி பைஸர் முஸ்தபாவின் தலையீட்டால் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. புறக்கோட்டை, இலங்கை மத்திய போக்குவரத்துச் சபையின் பிரதான பஸ் நிலையத்துக்கு அண்மித்த பகுதிகளில் அகற்றப்பட்டிருந்த நடைபாதைக் கடைத்தொகுதிகளே இவ்வாறு பைஸரின் தலையீட்டால் மீண்டும் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது.
குறித்த நடைபாதை வியாபாரிகளின் பொருளாதாரப் பிரச்சினைகள் மற்றும் வாழ்க்கைப் பிரச்சினைகள் தொடர்பில், சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்திற்கு பைஸர் கொண்டுவந்திருந்தார்.
அத்துடன், ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்பு நடைபாதை வியாபாரிகளிடம் இதுதொடர்பில் பைஸரினால் வாக்குறுதியும் வழங்கப்பட்டிருந்தது. பாதசாரிகளுக்கு எவ்வித இடையூறுகளும் ஏற்படாதவண்ணம் இக்கடைத்தொகுதிகள் வழங்கப்படவேண்டும் என பைஸரினால் உரிய அதிகாரிகளிடம் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கு அமைய, அகற்றப்பட்டிருந்த இக்கடைத் தொகுதிகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கான அனுமதி அதிகாரிகளினால் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
-ஐ. ஏ. காதிர் கான்
No comments:
Post a Comment