ஜனாதிபதி தேர்தலின் போது தம்மை மஹிந்த ஆட்சிக் காலத்தின் வெள்ளை வேன் சாரதிகள் என அடையாளப்படுத்தி கடத்தல்கள் தொடர்பில் விபரித் இரு நபர்களும் ஏலவே பல குற்றச் செயல்களுக்காக தேடப்பட்டு வந்தவர்கள் என தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
அன்டனி டக்ளஸ் பெர்னான்டோ மற்றும் சஞ்சீவ மதநாயக்க ஆகிய பெயர்களால் அறியப்படும் குறித்த நபர்கள் ஏலவே கொழும்பு - கொட்டஹேனயில் 10 லட்ச ரூபா கொள்ளைச் சம்பவம் மற்றும் 2013ல் ஜாஎல பகுதி ஆடைத் தொழிற்காலையொன்றில் 75 லட்ச ரூபா கொள்ளை, செட்டித் தெருவில் மூன்று கோடி ரூபா பெறுமதியான வெளிநாட்டு நாணய கொள்ளை போன்ற பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள் என விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
தற்போது கைது செய்யப்பட்டுள்ள குறித்த நபர்கள் விசேட சிறையில் அடைக்கப்பட்டு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை நிர்வாகம் தெரிவிக்கிறது.
No comments:
Post a Comment