ராஜித வெளிநாட்டு உளவாளி: சிங்ஹலே குற்றச்சாட்டு - sonakar.com

Post Top Ad

Tuesday, 24 December 2019

ராஜித வெளிநாட்டு உளவாளி: சிங்ஹலே குற்றச்சாட்டு


ராஜித சேனாரத்ன வெளிநாடுகளிலிருந்து கிடைக்கப் பெறும் டொலர்களுக்காக இலங்கையில் அரசியல் குழப்பங்களை ஏற்படுத்தி, அதில் குளிர்காய்ந்து வருவதாக சிங்ஹலே அமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது.



சுவிஸ் தூதரக ஊழியர் கடத்தல் நாடகமும் ராஜிதவினாலேயே திட்டமிடப்பட்டிருந்ததாகவும் தற்போது தமது உண்மைகள் வெளி வரும் தருணத்திலேயே ராஜித திக்குமுக்காடுவதாகவும் அவ்வமைப்பு மேலும் தெரிவிக்கிறது.

எனினும், தமது அமைப்பினால் மேற்கொள்ளப்பட்டுள்ள அவருக்கு எதிரான முறைப்பாடுகள் தொடர்பில் எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படாமை ஆச்சரியமளிப்பதாகவும் அவ்வமைப்பு தெரிவிக்கிறதது. தமது கைதைத் தவிர்ப்பதற்கான ராஜிதவின் மனு மீதான விசாரணை 30ம் திகதி இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

1 comment:

Abdul said...

எது எப்படியோ இந்த மனிதர் முஸ்லிம்களுக்காக நிறைய பேசியிருக்கிறார் உதாரணமாக Derana,Hiru தொலைக்காட்சி நிகழ்வுகளில் நேராக முஸ்லிம்களின் தாக்குதல் நடவடிக்கையை எதிர்த்து வாதாடியுமுள்ளார் அப்போது குருநாகல் வைத்தியரை குற்றவராக அந்த நிகழ்ச்சிகளில் கேள்விகள் கேட்கும் போது ராஜித அவர்கள் பேட்டிகானுபவரிடம் நீங்கள் சிங்கள மருத்துபவரை உண்மையில் குற்றம் செய்து இருந்தாலும் அவ்வாறு குற்றம் செய்தது என்று பெரிதாக பேசுவீங்களா என்று நேராக பேசியிருக்கிறார்.

Post a Comment