தம்மைத் தாமே வெள்ளை வேன் சாரதிகள் என ஊடகங்களுக்கு அறிமுகப்படுத்தி, வெள்ளை வேன் கடத்தல்கள் இடம்பெற்றது எப்படியென விளக்கமளித்திருந்த இருவரது விளக்கமறியலும் நீடிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி தேர்தலின் போது இவ்விருவரையும் அறிமுகப்படுத்தியதன் பின்னணியில் தற்போது ராஜித சேனாரத்ன தேடப்பட்டும் வருகிறார். அவர் சொல்லியே தாம் அவ்வாறு தகவல் வெளியிட்டதாக குறித்த நபர்கள் விசாரணையின் போது தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், குறித்த நபர்களின் விளக்கமறியல் ஜனவரி 6ம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment