பௌத்த மதகுரு ஒருவர் மூன்று பேர் கொண்ட குழுவினால் தாக்கப்பட்டு வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
மட்டக்களப்பு எல்லையிலுள்ள ஓமாடியாமடு கிராமத்தில் உள்ள சுதுகல ஆரன்ய சேனாச்சனிய விகாரையின் பௌத்த பிக்குவான சுபத்தாலங்காரம கிமி என்பவரே இவ்வாறு தாக்கப்பட்டுள்ளார்.
நேற்று வெள்ளிக் கிழமை மாலை குறித்த பௌத்த மதகுரு விகாரையில் தமது வழமையான பணிகளை மேற்கொண்டிருந்தபோது மது போதையில் வந்த மூவர் தாக்குதலை மேற்கொண்டு விட்டு தப்பிச் சென்றுள்ளதாக கூறப்படுகிறது.
தாக்குதலை மேற்கொண்டவர்கள் அங்கிருந்த உடமைகளை சேதப்படுத்தி விட்டு சென்றுள்ளதாக பொலிஸ் விசாரணையின் மூலம் தெரிவிக்கப்படுகிறது.
மேற்படி சம்பவம் தொடர்பாக வாழைச்சேனை பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் அயலூர் வாசிகள் என்றும் தன்னால் அடையாளம் காட்டமுடியும் என்று தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக வாழைச்சேனை பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
-எஸ்.எம்.எம்.முர்ஷித்
No comments:
Post a Comment