செய்தியாளர் சந்திப்பில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்களை அடிப்படையாக வைத்து ஒருவரை கைது செய்வதற்கு எந்த அதிகாரமும் இல்லையென தெரிவிக்கின்ற அஜித் பெரேரா, சம்பிக்க ரணவக்கவுக்கு பிணை கிடைத்ததன் ஊடாக அடைந்த ஏமாற்றத்தை மறைக்கவே ராஜிதவை கைது செய்வதற்கான நாடகம் நடாத்தப்படுவதாக தெரிவிக்கிறார்.
அரசின் பின்னடைவை மறைப்பதற்காக இவ்வாறு திசை திருப்பும் முயற்சிகள் இடம்பெறுவதாக தெரிவிக்கின்ற அவர், செய்தியாளர் சந்திப்பொன்றில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்களை அடிப்படையாக வைத்து கைது செய்ய சட்டத்தில் இடமில்லையென்கிறார்.
இதேவேளை, பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் ராஜித தற்போது வீட்டில் இல்லையென தெரிவிக்கப்படுகின்ற அதேவேளை, அவர் 30ம் திகதி வழக்குக்கு ஆஜராவார் என சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment