சுவிஸ் தூதரக ஊழியர் ஒருவர் வெள்ளை வேனில் கடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படும் சம்பவம் தொடர்பில் குறித்த பெண் ஊழியர் பொலிசாருக்கு வாக்குமூலம் அளிக்க அனுமதிக்கப்பட வேண்டும் எனக் கோரி சுவிஸ் தூதரகம் முன்னால் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார் ஓய்வுபெற்ற மேஜர் அஜித் பிரசன்ன.
குறித்த சம்பவம் தொடர்பில் சுவிஸ் தூதரகம் இலங்கை அரசுக்கு அறிவித்;துள்ள அதேவேளை, குறித்த பெண் ஊழியரின் நடவடிக்கைகளுக்கும் தரப்பட்ட தகவல்களுக்குமிடையில் முரண்பாடு இருப்பதாக இலங்கை அரசு தெரிவிக்கிறது.
குறித்த ஊழியர் வெளியான நேரம், கடத்தப்பட்டதாக சொல்லப்பட்ட தருணத்தில் அவரது ஏனைய நடவடிக்கைகள் பற்றி விசாரிக்க வேண்டும் என பொலிஸ் தரப்பு தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment