ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப் பதவி வருட இறுதிக்குள் சஜித் பிரேமதாசவுக்குக் கிடைக்கும் என நம்பிக்கை வெளியிட்டுள்ளார் ஹரின் பெர்னான்டோ.
எதிர்க்கட்சித் தலைவர் பதவியைப் பெற்றுக் கொண்டுள்ள நிலையில் சஜித்தை கட்சித் தலைவராக நியமிப்பது தொடர்பில் ஆராய திங்களன்று குழுவொன்று நியமிக்கப்படவுள்ளதாகவும் தகவல் வெளியிட்டுள்ள அவர், சஜித் தலைவராவது நிச்சயம் என நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
சஜித் பிரேமதாச தலைமையிலான அணியினர் வேறு கட்சியொன்றை ஆரம்பிக்கவும் தயாராக இருந்த நிலையில் அவருக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment