ஓட்டமாவடி – காவத்தமுனை வெள்ளம்: 828 குடும்பங்கள் இடப்பெயர்வு - sonakar.com

Post Top Ad

Sunday, 22 December 2019

ஓட்டமாவடி – காவத்தமுனை வெள்ளம்: 828 குடும்பங்கள் இடப்பெயர்வு


ஓட்டமாவடி ஆற்றின் நீர் பெருக்கெடுத்ததால் காவத்தமுனை ஆற்றோரம் வசித்து வந்த 828 குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளதாக ஓட்டமாவடி பிரதேச சபையின் உறுப்பினர் எம்.பீ.எம்.ஜெளபர் தெரிவித்தார்.


இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள காவத்தமுனை பகுதியைச் சேர்ந்த 828 குடும்பங்கள் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்துள்ளனர்.

இதில் இதுவரை 84 குடும்பங்களைச் சேர்ந்த 290 பேர் காவத்தமுனை அல் அமீன் வித்தியாலயத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளதோடு மேலும் பாதிக்கப்பட்ட 744 குடும்பங்களைச் சேர்ந்த 2675 பேர் உறவினர்களின் வீடுகளில் வசித்து வருகின்றனர்.

குறித்த அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களையும், வீட்டுப் பொருட்களையும் மீட்பதற்கு இரவுபகல் பாராது பாடுபட்ட பிரதேச சபை உறுப்பினர்கள், ஜும்ஆ பள்ளிவாசல் நிர்வாகத்தினர் மற்றும் கிராம அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள், முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் மீரான் ஹாஜியார், சமூக அமைப்பினர்கள் அனைவருக்கும் நன்றிகளை தெரிவிப்பதாக பிரதேச சபை உறுப்பினர் தெரிவித்தார்.

குறித்த வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டு பாடசாலைகளில் தங்கியுள்ளவர்களை பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி மற்றும் பிரதேச சபை தவிசாளர் ஐ.ரீ.அஸ்மி, பிரதேச செயலக செயலாளர் நிஹாரா மவ்ஜூத் ஆகியோர் விஜயம் செய்து மக்களின் தேவைகளை கேட்டு அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர் என பிரதேச சபை உறுப்பினர் எம்.பீ.எம்.ஜெளபர் மேலும் தெரிவித்தார்.

-எச்.எம்.எம்.பர்ஸான்

No comments:

Post a Comment