இந்திய தலை நகர் டில்லியின் மத்திய பகுதியில் தொழிற்சாலை கட்டிடம் ஒன்றில் இன்று காலை ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் 43 பேர் உயிரிழந்துள்ளதாக இது வரை வெளியான தகவல்கள் தெரிவிக்கின்றன.
கைப் பைகள் தயாரிக்கும் குறித்த தொழிற்சாலை மூலப் பொருட்கள் பெருமளவில் இருந்ததனால் தீ வேகமாக பரவியதாக தெரிவிக்கப்படுகிறது.
கட்டிடத்தில் உறங்கிக் கொண்டிருந்த தொழிலாளர்களே விபத்தில் பலியாகியுள்ள அதேவேளை, தீ பரவியதற்கான காரணம் தொடர்பில் விசாரணை நடந்து வருவதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment