இலங்கையின் சுற்றுலாத்துறையை முன்னேற்றும் முகமாக 48 நாடுகளுக்கு இலவச விசா வழங்கியதன் ஊடாக அரசுக்கு 4 பில்லியன் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இப்பின்னணியில் இலவச விசா வழங்குதலை நிறுத்துவதற்கான கோரிக்கையும் முன் வைக்கப்பட்டுள்ளதாக அறியமுடிகிறது.
35 அமெரிக்க டொலர்கள் கட்டணம் அறவிடப்பட்டு வந்த போதிலும் சுற்றுலாத்துறையை ஊக்குவிக்கும் நிமித்தம் இவ்வாறு கட்டணம் அறவிடுதல் நிறுத்தப்பட்டிருந்தது. இதேவேளை ஈஸ்டர் தாக்குதலின் பின் வீழ்ச்சி கண்டிருந்த சுற்றுலாத்துறையை தூக்கி நிறுத்துவதற்கும் இந்நடவடிக்கை உதவியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment