ஐக்கிய தேசியக் கட்சியின் முன்மொழிவுக்கமைய சஜித் பிரேமதாசவை எதிர்க்கட்சித் தலைவராக ஏற்றுக்கொண்டுள்ளார் சபாநாயகர் கரு ஜயசூரிய.
எதிர்வரும் ஜனவரி 3ம் திகதி நாடாளுமன்றின் புதிய தவணையை ஆரம்பிப்பதற்கும் இணக்கம் காணப்பட்டுள்ள நிலையில் அன்றைய தினமே எதிர்க்கட்சித் தலைவருக்கான உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியாகவுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சிக்குள் நிலவிய இழுபறி இன்றைய தினம் முடிவுக்கு வந்ததையடுத்து சஜித் பிரேமதாசவை கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க எதிர்க்கட்சித் தலைவராக பிரேரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment