நிறைவேற்று அதிகார ஜனாதிபதியின் அதிகாரங்களை வரையறுக்கும் 19ம திருத்தச் சட்டத்தை நீக்க வேண்டும் என தெரிவிக்கிறார் ஜனாதிபதி கோட்டாபே ராஜபக்ச.
பொதுத் தேர்தல் ஊடாக மூன்றிலிரண்டு நாடாளுமன்ற பெரும்பான்மை கிடைக்கப் பெற்றால் குறித்த சட்டத்தை நீக்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் விளக்கமளித்துள்ளார்.
18ம் திருத்தச் சட்டம் ஊடாக ஒரே நபர் எத்தனை தடவை வேண்டுமானாலும் ஜனாதிபதியாக பதவி வகிப்பதற்கான வழி உருவான போதிலும், அது ஜனநாயக விரோம் என உணரப்பட்ட நிலையிலேயே 19ம் திருத்தச் சட்டத்துக்கான மக்கள் ஆதரவு பெறப்பட்டு ரணில் - மைத்ரி கூட்டாட்சியில் இச்சட்டம் நிறைவேற்றப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment