தனக்கு வாக்களித்த ஆதரவாளர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாக சஜித் பிரேமதாசவினால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த சந்திப்புக்கு பெருந்திரளான கட்சி ஆதரவாளர்கள் திரண்டு வந்து உணர்வுபூர்வமாக தமது அன்பை வெளிக்காட்டியுள்ளனர்.
கொழும்பு, வொக்சோல் வீதியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்வுக்கு வந்த பெரும்பாலானோர் சஜித்தின் தோல்வியை ஏற்றுக்கொள்ள முடியாது உணர்வுபூர்வமாகக் காணப்பட்டிருந்தனர்.
இந்நிலையில், சஜித்துக்கு ஆதரவான நாடாளுமன்ற உறுப்பினர்களை ஒன்று திரட்டி அவரை எதிர்க்கட்சித் தலைவராக்கும் கோரிக்கையும் முன் வைக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றமையும் தாம் தனிக் கட்சியாகப் பயணிக்கத் தயாரென ஹரின் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment