திட்டமிட்ட ரீதியில் சமூகங்களுக்கிடையில் உருவாக்கப்பட்ட மத விரோதம் மற்றும் இனவாததே ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபே ராஜபக்சவுக்கு வெற்றியைப் பெற்றுக் கொடுத்திருப்பதாக தெரிவிக்கிறார் சம்பிக்க ரணவக்க.
இல்லாத பிரச்சினை ஒன்றை உருவாக்கி அதனூடாக அரசியல் இலாபமடைவதில் ராஜபக்ச குடும்பம் வெற்றியடைந்திருப்பதாக தெரிவித்திருக்கும் அவர், ஜே.வி.பியின் ஜனநாயக வழிமுறையையும் கூட நிராகரித்து மக்கள் கோட்டாவைத் தெரிவு செய்யும் அளவுக்கு அதன் ஆழம் இருப்பதாகவும் இதனை முதலீடாகக் கொண்டே நாடாளுமன்ற தேர்தலும் எதிர்கொள்ளப்படும் என்பதால் இதன் தாக்கம் அபாயகரமானதாக இருக்கும் எனவும் அவர் எதிர்வு கூறுகிறார்.
இலவசமாக பொருட்களை வழங்கும் வாக்குறுதிகளுக்கு மக்கள் அசைந்து கொடுக்கவில்லையென்பதை நன்கு அவதானித்து இனி வரும் காலங்களில் நாட்டை முழுமையாக ஆட்கொண்டிருக்கும் இவ்வினவாத சூழ்ச்சியை வெற்றி கொள்ள வேண்டியதன் அவசியத்தை நாட்டு மக்கள் உணர வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
சம்பிக்கவின் உரையடங்கிய காணொளியைக் கீழ்க்காணலாம்:
No comments:
Post a Comment