கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் சக்திகளை அடக்குவதன் நிமித்தமே தமது தரப்பு கோட்டாபே ராஜபக்சவுடன் கை கோர்த்திருப்பதாக விளக்கமளித்துள்ளர் கருணா அம்மான் என அறியப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன்.
முஸ்லிம் அரசியல் தலைமைகள் அனைத்தும் சஜித்தின் பக்கமே இருப்பதனால் சஜித் வெற்றி பெற்றால், கிழக்கின் முதல்வர் மற்றும் ஆளுனர் பதவிகள் முஸ்லிம்களுக்கே செல்லும் எனவும் முஸ்லிம் ஏகாதிபத்தியத்திலிருந்து தமிழரைக் காப்பாற்றவே கோட்டாவோடு கை கோர்த்திருப்பதாகவும் கருணா மேலும் தெரிவிக்கிறார்.
ரவுக் ஹக்கீம், அமீர் அலி, அலி சாஹிர் மற்றும் ரிசாத் பதியுதீன் போன்றவர்கள் துவேசம் பேசி வரும் சக்திகள் எனவும் ஜனாதிபதி தேர்தலானது கிழக்கில் தமிழர்களின் இருப்பா? முஸ்லிம்களின் இருப்பா? எனும் கேள்வியாக மாறியிருப்பதாகவும் அவர் மேலும் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment