சமூக வலைத்தளங்கள் ஊடாக வீடியோக்களை வெளியிட்டு தம்மை சமூக உணர்வாளர்களாக காட்டிக் கொண்டு, அதனூடாக அரசியல்வாதிகளிடம் வீடு, செலவுக்குப் பணம் மற்றும் வாழ்வாதாரத்தைப் பெற்றுக்கொள்ள முயற்சிக்கும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் அமைச்சர் ரவுப் ஹக்கீமுக்கு எதிராக தீவிரவாத பிரச்சாரத்தை மேற்கொண்டு அதனூடாக ஒரு கோடி ரூபா வரை கப்பம் பெற்றுக்கொள்ள முயன்ற நபர் ஒருவர் பற்றி தகவல் வெளியிட்டுள்ளார் மு.கா தலைவர்.
ஒரு கோடி ரூபாவில் ஆரம்பித்து 5 மில்லியன் ரூபா வரை சலுகை விலை வழங்கும் ரிசாம் மரூஸ் என அறியப்படும் குறித்த நபர், தாம் ஏலவே ரவுப் ஹக்கீமுக்கு எதிராக மேற்கொண்ட பிரச்சாரங்களுக்கு மாற்றீடாக, முன் செய்த பிரச்சாரங்கள் பொய்யென கூறி புதிய வீடியோக்கள் வெளியிடவே இவ்வாறு கப்பம் கோரியுள்ளதாக அமைச்சர் ஹக்கீம் விளக்கமளித்துள்ளார்.
இதன் போது, முன்னாள் கிழக்கு மாகாண ஆளுனர் ஹிஸ்புல்லாஹ்வின் தொடர்பும் அவர் இவர் மற்றும் மிப்லால் போன்ற நபர்களை ஊக்குவிக்கும் விதம் பற்றியும் கப்பம் கோரும் நபர் விளக்கமளிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
அமைச்சர் ஹக்கீம் வெளியிட்டுள்ள உரையாடல் காணொளி:
No comments:
Post a Comment