இலங்கையில் மனித உரிமைகள் மதிக்கப்படும் சூழ்நிலை உருவாக்க வேண்டும் என புதிய ஜனாதிபதி கோட்டாபே ராஜபக்சவுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது அமெரிக்கா.
ஜனநாயக முறையில் தலைவர் ஒருவரைத் தேர்ந்தெடுத்த இலங்கை மக்களுக்குத் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதாகவும் புதிய ஜனாதிபதியுடன் இணைந்து செயற்படத் தயாராக இருப்பதாகவும் அமெரிக்க ராஜாங்க செயலாளர் தெரிவித்துள்ளார்.
நீதியான தேர்தல் ஒன்றை நடாத்தியமை தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவுக்கும் அமெரிக்கா வாழ்த்து தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment