கடந்த ஆட்சியில் இடம்பெற்ற அரசியல் பழிவாங்கல்களை விசாரிக்க ஆணைக்குழு அமைக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார் ஜனாதிபதி கோட்டாபே ராஜபக்ச.
இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அரச ஊழியர்களை பாதுகாக்கும் வகையில் சட்டமூலம் உருவாக்கப்படவுள்ளதாக நேற்றைய தினம் மஹிந்த ராஜபக்ச தெரிவித்திருந்ததுடன் விசாரணை என்ற பேரில் அரச ஊழியர்கள் பழிவாங்கப்பட்டு வந்ததாக பெரமுன தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment