தேர்தல் முடிவின் பின் ஐக்கிய தேசியக் கட்சியினர் பரவலாக துன்புறுத்தப்படும் சம்பவங்கள் இடம்பெற்று வருவதாக கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, ஜனாதிபதியிடம் முறையிட்டிருந்ததோடு இது குறித்து பெரமுன கட்சி மட்டத்தில் நடவடிக்கை எடுக்கும் படி கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்நிலையில், அதற்குப் பதிலளித்துள்ள ஜனாதிபதி கோட்டாபே அவ்வாறு நிகழாது பார்த்துக் கொள்வதாக வாக்குறுதியளித்துள்ளார்.
பல இடங்களில் சஜித் பிரேமதாசவுக்கு வாக்களித்த காரணத்திற்காக பெரமுனவினரால் மக்கள் துன்புறுத்தப்பட்டும், அச்சுறுத்தப்பட்டும் வருவதாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில் ரணில் - கோட்டா இது தொடர்பில் இணக்கம் கண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment