பொதுஜன பெரமுன வேடபாளர் கோட்டாபே ராஜபக்சவுக்கு வாக்களிப்பது எப்படியென விளக்கும் 219 மாதிரி வாக்குச் சீட்டுகளுடன் தலவாக்கல - லிந்துல நகர சபை பிரதி மேயர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வாக்குச் சாவடிக்குச் செல்லும் வாக்காளர்களை இடைமறித்து இப்படிவங்களைக் காட்டி கோட்டாபேவுக்கு வாக்களிக்குமாறு வற்புறத்தி வந்த நிலையிலேயே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நாடளாவிய ரீதியில் பெரமுன உறுப்பினர்கள் பெருமளவு இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளதாக தேர்தல் வன்முறைகளைக் கண்காணிக்கும் மையம் தகவல் வெளியிட்டுள்ளது
No comments:
Post a Comment