ஜனாதிபதி தேர்தலின் பின்னணியிலான அச்சு மற்றும் இலத்திரனியல் விளம்பரங்கள், சுவரொட்டிகள் போன்றவற்றிற்காக பிரதான அரசியல் கட்சிகள் பெருமளவு செலவு செய்துள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளது தேர்தல் வன்முறைகளைக் கண்காணிப்பதற்கான அமைப்பு (CMEV).
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன இதுவரையில் சுமார் 750 மில்லியன் ரூபா இதற்கென செலவிட்டுள்ள அதேவேளை புதிய ஜனநாயக முன்னணி 450 மில்லியன் ரூபாவையும் தேசிய மக்கள் சக்தி 31 மில்லியன் ரூபாவையும் இவ்வாறு செலவிட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இன்னும் ஒரு வாரமே எஞ்சியுள்ள நிலையில் இத்தொகை மேலும் அதிகரிக்கும் என எதிர்வுகூறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment