ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன.
தற்காலிகமாக பேராசிரியர் ரோஹன பியதாச இப்பதவியில் இருந்து வந்த நிலையில் தற்போது ஜனாதிபதி பதவிக்காலம் முடிந்த கையோடு கட்சித் தலைமையை அவர் பொறுப்பேற்றுள்ளார்.
மஹிந்த ராஜபக்ச அணி தனியாகப் பிரிந்து பொதுஜன பெரமுன கட்சியை நடாத்தி வரும் நிலையில், ஒரு காலத்தில் இரு பெரும் கட்சிகளுள் ஒன்றாக விளங்கிய சுதந்திரக் கட்சி தற்போது சிறு கட்சி நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளமையும் எதிர்வரும் பொதுத் தேர்தல் அதன் எதிர்காலத்தை இன்னும் கேள்விக்குறியாக்கக் கூடும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment