ஏட்டிக்குப் போட்டியாக வகை தொகையின்றி தேர்தல் வாக்குறுதிகள் தெரிவிக்கப்பட்டு வரும் தொடர்ச்சியில் ஒவ்வொரு ஏழைக்குடும்பத்திலிருந்தும் ஒருவருக்கு அரச தொழில் வாய்ப்பு வழங்கப் போவதாக தெரிவிக்கிறார் கோட்டாபே ராஜபக்ச.
அரச தொழிலைப் பெற க.பொ.த சாதாரண தர பெறுபேறுகள் அவசியம் தேவையெனும் நிபந்தனையையும் நீக்கி இவ்வாறு தான் தொழில்வாய்ப்பு வழங்கப் போவதாக கோட்டா தெரிவிக்கிறார்.
ஏலவே வரி விலக்கு உட்பட பல்வேறு சலுகைகளை கோட்டா அறிவித்துள்ளமை தொடர்பில் சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் வெளியிடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment